செய்திகள் :

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

post image

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள ரே பரேலி மக்களவைத் தொகுதியின், உறுப்பினரான ராகுல் காந்தி, இன்று (ஜூலை 16) லக்னௌ நகருக்கு வருகைத் தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர், நாளை (ஜூலை 17) தனது சொந்த தொகுதியான ரே பரேலியிலுள்ள, உஞ்சாஹர் மற்றும் சதார் சட்டமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி பணியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ரே பரேலி பயணமானது, தவிக்கமுடியாத காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது வருகைக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஹர்சந்த்பூர் சட்டமன்றத் தொகுதியின் பணியாளர்களையும் அவர் நேரில் சந்தித்து, பின்னர் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு செல்லத் திட்டமிடப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

Congress MP and Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi's planned visit to his home constituency Rae Bareli has now been cancelled, it has been reported.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க