டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.
எம்பிக்கள் நுழையும் பிரதான வாயிலான மகர் திவார் பகுதியில் எதிர்க்கட்சி எம்பிக்களை மறித்து பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
அதேபோல், பாஜக எம்பிக்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இதையும் படிக்க : பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம்: கார்கே புகார்!
இந்த நிலையில், இன்று பகல் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியவுடன் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனால், மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து, நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் எம்பிக்களின் அமளியை தொடர்ந்து நாளை வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.