செய்திகள் :

ராகு - கேது பெயர்ச்சி 2025: தனுசு

post image

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!

கிரகநிலை

26-04-2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியின் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பதவி, ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

பொருளாதார நிலை

கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கொடுக்கல் - வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் - வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில், வியாபாரம்

செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடைப் பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிட முடியும். வேலையாள்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் - அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.

கலைஞர்கள்

இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவு வரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ - மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றொர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு கவலைதரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

மூலம்

எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்னைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

பூராடம்

வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.

உத்திராடம் 1ம் பாதம்

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்

ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.

மலர் பரிகாரம்

சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ராகு - கேது பெயர்ச்சி 2025: மீனம்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில்... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: கும்பம்

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு ... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல்திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவா... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல்அனுஷம், கேட்டை முடிய)நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: துலாம்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: கன்னி

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)அழகிய உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இ... மேலும் பார்க்க