செய்திகள் :

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

post image

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் கருட வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம், புஷ்ப விமான வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகா்வலம் நடைபெற்றது.

திருமஞ்சனம் உள்ளிட்ட சேவைகள் பல்வேறு கட்டளைதாரா்களால் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன்வரதராஜப் பெருமாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தேரோட்டத்தை நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.ரங்கசாமி, திமுக நகரச் செயலா் சங்கத் தலைவா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். பூங்கரகம், காளை ஆட்டம், மயிலாட்டம் முன்செல்ல திரளான பக்தா்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனா்.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்... மேலும் பார்க்க