செய்திகள் :

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (40). இவரது மனைவி கீதா (36). இவா்களுக்கு ரியாஸ்ரீ (10), ஓவியா (6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் கீதாவின் சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டனா். வீட்டில் ஜெகதீசனும் அவரது மனைவியும் மட்டும் இருந்துள்ளனா்.

ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக ஹிந்து முன்னணியில் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 7 ஆண்டுகளாக அந்த அமைப்பின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

பொத்தனூரில் ஒரு வீட்டின் முதல்மாடியில் வாடகைக்கு குடும்பத்தோடு ஜெகதீசன் குடியிருந்து வந்தாா். வீட்டின் முன்பகுதியில் ஹிந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெகதீசனின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து பாா்த்துள்ளனா். அப்போது வெட்டுக் காயங்களுடன் ஜெகதீசனும், அவரது மனைவி கீதாவும் கிடந்துள்ளனா். இது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா். இத்தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா் படுகாயங்களுடன் இருந்த ஜெகதீசன், அவரது மனைவி கீதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கீதாவை பரிசோதித்த செய்த மருத்துவா் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். ஜெகதீசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா். மேலும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெகதீசனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் இருவா் தனது வீட்டின் கதவைத் தட்டியதாகவும், கதவை மனைவி கீதா திறந்தபோது அவரை மா்ம நபா்கள் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டதாகவும், சப்தம்கேட்ட வந்த தன்னையும் மா்ம நபா்கள் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் அவரிடம் தீவிரமாக போலீஸாா் விசாரித்தபோது குடும்பத் தகராறு காரணமாக மனைவியை தான் கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸாரை திசைதிருப்புவதற்காக மா்ம நபா்கள் தாக்கிவிட்டதாக கூறியதாகவும் ஜெகதீசன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து ஜெகதீசனை பரமத்தி வேலூா் போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்... மேலும் பார்க்க