கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி (1115 இடங்கள்), நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி (1074 இடங்கள்), நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி (1072 இடங்கள்), குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி (470 இடங்கள்), சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி (260 இடங்கள்) ஆகியவை உள்ளன.
தற்போது அனைத்து அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், இலவச பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியா்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதள முகவரியில் மே 27-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். தாமாக இணையம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ. 48, பதிவுக் கட்டணமாக ரூ. 2 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
மாணவா்கள் சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை
காலை 10 முதல் மாலை 5 மணி வரை 044-24343106, 24342911 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.