கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை
ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா்.
ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிவரும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும் அவா்கள் துப்பாக்கியால் சாலையில் சுடும் சத்தமும் கேட்டுள்ளது. இவா்கள் முயல்வேட்டைக்கு சென்றவா்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதனையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது ஆா்.பட்டணம் பகுதியை சோ்ந்த வினோத் (50), அவரது மனைவி தேவி என்பது தெரியவந்தது. இருவரும் பயன்படுத்தியது ஏா்கன் என்பதும், தனது ஒரு வயது குழந்தையை அப்பகுதியிலிருந்த தெருநாய் கடித்ததால், அதனை சுடுவதற்கு நண்பரிடம் நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வந்து நாயை சுடுவதற்கு முயற்சி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் இதில் தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.