ராஜஸ்தான் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்! சந்தீப் சர்மா விலகல்!
ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் அணியில் இணைந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தொடரில் இருந்து விலகிவிட்டன. இருப்பினும், இன்னும் ஓரிரு போட்டிகளில் விளையாடவுள்ளன.
இந்த நிலையில், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருந்த சந்தீப் சர்மா, 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இதனால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கர் அணியில் இணைந்துள்ளார்.
நன்ரே பர்கர் 150 கி.மீ.க்கு மேல் பந்துவீசுவதில் மிகவும் பிரபலமானவர். கடந்தாண்டு ராஜஸ்தானுக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவரை ராஜஸ்தான் அணி ரூ.3.50 கோடிக்கு மாற்றுவீரராக அணியில் சேர்ந்திருக்கிறது.
இதையும் படிக்க: போர்ப் பதற்றம்: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்!