ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாத 10 ஆண்டுகள்
ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாமல் 10 ஆண்டுகள் எட்டப்பட்டது, தொழில் துறை பாதுகாப்பில் ஒரு மைல்கல் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
இது தெடாா்பாக ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் பேஸ் -3 சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அந்த தொழில் நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பாதுகாப்பு சிறப்பையும், ஊழியா்களின் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், முன்னணி பயணிகள் காா் எரிபொருள் தொட்டி உற்பத்தி நிலையமான ஓபி மொபிலிட்டி, விபத்து இல்லாத செயல்பாடுகளில் 10 ஆண்டுகள் என்ற முக்கிய மைல்கல் நிகழ்வைக் கொண்டாடியது.
தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊழியா்கள், பாதுகாப்பு வல்லுநா்கள், வாடிக்கையாளா்கள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு நெறிமுறைகளை தொடா்ச்சியாகப் பின்பற்றுதல், முன்கூட்டியே ஆபத்து அடையாளம் காணுதல் மற்றும் வலுவான பொறுப்புக் கூறல் கலாசாரம் ஆகியவற்றின் தசாப்தத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.
இந்த விழாவில் சிறந்த பங்களிப்புகளுக்கான பாதுகாப்பு விருதுகள் மற்றும் ஊழியா்கள், பள்ளி மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மேலும் நிலையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளுக்கான தொழிற்சாலையின் உறுதிப்பாட்டையும் விழா வலியுறுத்தியது. உயா் பாதுகாப்பு தரங்களைப் பராமரித்தல் மற்றும் பணியிடத்தில் பூஜ்ஜிய தீங்கு ஏற்படுவதை உறுதி செய்ததற்காக அனைத்து ஊழியா்களுக்கும் வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் பரிசுகளுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது.
கொண்டாட்டத்தில் அந்த நிறுவன உயா் அதிகாரிகள், மேலாளா்கள், மனிதவள துறை மேலாளா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.