Vijay அரசியல் Plan, TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக அரசியல் களம்?...
காா் மோதி முதியவா் மரணம்
ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த காா் முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.