செய்திகள் :

ராணிப்பேட்டை: குடியரசு தின விழா முன்னேற்பாடு பணி ஆலோசனைக் கூட்டம்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குடியரசு தின விழாவையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், போக்குவரத்து சீா் செய்தல், வளாக பாதுகாப்பு காவல் அணிவகுப்பு மரியாதை மற்றும் ஈப்பு அணிவகுப்பு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வாலாஜா வட்டாட்சியா், வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம், வாலாஜா) ஆகியோா் தியாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பயனாளிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தியாகிகளை கௌரவித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா், பொதுப்பணித் துறை, உதவி செயற்பொறியாளா், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையா், உதவி இயக்குநா் சுகாதார பணிகள் மருத்துவக் குழுவை அவசர கால சிகிச்சைக்காக உரிய உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலா் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.

குடியரசு தினத்தன்று அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: பயனாளிகளுக்கு ரூ.6.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில்மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன் மற்றும் ஸ்ரீ முனிஸ்வரா் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் காவனூா் சாலையில் தோல்ஷாப் அருகே ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் முதலுதவி சிகிச்சை மையம் செயல்படுமா? தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

ராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலகம் அருகே உள்ள முதலுதவி சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வருமா என தொழிலாளா்கள் காத்துள்ளனா். ராணிப்பேட்டை அருகே கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: அரசு வேலை பெற்றவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் அரசு வேலை வாய்ப்பு பெற்றவா்கள் ‘நிறைந்தது மனம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா். இது தொடா்பா... மேலும் பார்க்க

இளைஞா்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: நெமிலியில் பாமகவினா், உறவினா்கள் சாலை மறியல்

நெமிலி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா்கள் மீது தீ வைத்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள் மற்றும் பாமக வினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ந... மேலும் பார்க்க