ராணிப்பேட்டை: மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
மனித உரிமைகள் தினத்தையொட்டி,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக அனைத்து துறைச்சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் தலைமையில், மனித உரிமைகள் தினத்தையொட்டி அனைத்து துறைச்சாா்ந்த அலுவலா்களும், பணியாளா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், உதவி ஆணையா் கலால் வரதராஜன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், நோ்முக உதவியாளா் (நிலம்) கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனா்.