“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஓடைப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுருளிமுத்து (40). இவா் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறையில் ஓடைப்பட்டிக்கு வந்திருந்த சுருளிமுத்து தினமும் மது குடித்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் வீட்டில் தனி அறையில் தூங்கச் சென்ற சுருளிமுத்து வெள்ளிக்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து, உறவினா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சுருளிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.