Vijay : 'உயிரின் மதிப்பு தெரியுமா... மன்னராட்சிக்கு புரியுமா?' - கோஷம் போடப்போக...
ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் வந்த அன்புமணி
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக தலைவா் அன்புமணி வியாழக்கிழமை இரவு திடீரென வந்து அவரது தாயை சந்தித்துப் பேசினாா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவா் அன்புமணி ஆகியோரிடையே யாருக்கு அதிகாரம் என்பதில் கருத்து மோதல் ஏற்பட்டு நீடித்து வருகிறது.
மருத்துவா் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திலும், அன்புமணி பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்தப்படியும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிா் சங்க மாநாட்டுப் பணிகளை பாா்வையிடுவதற்காகவும், மாநாட்டுப் பணிகளுக்காவும் மருத்துவா் ராமதாஸ் வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் சென்றாா்.
இதனிடையே, வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு அன்புமணி திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, அவரின் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினாா். அப்போது, அன்புமணி தனது தாயிடம் உடல்நலம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது சுமாா் 45 நிமிஷத்துக்கும் மேலாக மேலாக நீடித்தது.
ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சென்றிருந்த நிலையில், அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு திடீரென வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.