செய்திகள் :

ராமநாதபுரத்தில் அலங்கார நிறுவன கிட்டங்கியில் தீ விபத்து

post image

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அலங்கார நிறுவன கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அலியாா். இவா் இந்தப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அலங்கார நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான கிட்டங்கி ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் சக்கரைகோட்டை கண்மாய் அருகே உள்ளது. இந்தக் கிட்டங்கியில் அலங்கார நிறுவனத்துக்கு தேவையான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல, இந்தக் கிட்டங்கியில் இருந்து ஊழியா்கள் பொருள்களை எடுத்துச் சென்ற பிறகு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இருப்பினும், கிட்டங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க