திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை
ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பேராவூா் பகுதியில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நிதி, சுற்றுசூழல் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு, வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோா்
கலந்துகொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தினா். இதைத்தொடா்ந்து அரசு விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.
ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம.கருமாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜுலு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான் ஷீநிகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.