செய்திகள் :

ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சையான பின்னணி என்ன?

post image

ராமநாதபுரத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்களைப் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தேசிய கொடிக்கு மரியாதை செய்த அதிகாரிகள்

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய 75 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 229 அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை
அணிவகுப்பு மரியாதை

இவ்விழாவில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த 1227 மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அப்போது தனியார் பேக்கரி நிறுவனத்தினரால் தேசியக் கொடி வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக் விழா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. மூவர்ண நிறங்களுக்கு மத்தியில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டிருந்த 79 கிலோ எடையிலான அந்த கேக்கினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் வெட்டினர்.

கேக் வெட்டிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்
கேக் வெட்டிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்

நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் தேசியக் கொடிக்கென மரியாதையினைச் செலுத்திய நிலையில், தேசியக் கொடியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட அதிகாரிகள் வெட்டி கொண்டாடியிருப்பது பொது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.

கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகாரிகள் நடத்திய இது போன்ற செயல்களை வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Sanitary workers row : CM Stalin இப்படி செய்யலாமா? - CPM Selva Interview | Vikatan

தங்கள் பணியை தனியார் மயமாக்கம் செய்யக்கூடாது என 13 நாள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைதுசெய்தது காவல்துறை. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்... மேலும் பார்க்க

11 மணி நேர ED சோதனை: கைகுலுக்கி அனுப்பிய அமைச்சர், சூட்கேஸுடன் சென்ற அதிகாரிகள் - என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணிக்கு அமலாக்கதுறையினர் சென்று செக்யூரிட்டி கார்டுகளை வெளியேற்றி விட்டு சோதனையில் ஈ... மேலும் பார்க்க

எல்லை பேச்சுவார்த்தை: இந்தியா வரும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் - திட்டம் என்ன?

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா - சீனா உரையாடல் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இந்தியா வருகிறார் என இரு நாட்டு அரசுகளும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த... மேலும் பார்க்க

RSS:``மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலா..." - கண்டனங்களை பதிவு செய்த கேரள முதல்வர்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க