``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
ராமேசுவரத்தில் குவிந்த ஐயப்பப் பக்தா்கள்
ராமேசுவரம்: சபரிமலை ஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் ஐயப்பப் பக்தா்கள் திரளானோா் ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.
சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் அங்கு ஜோதி தரிசனம் செய்து விட்டு ராமேசுவரம் வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 14- ஆம் தேதி சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்த திரளான பக்தா்கள் வியாழக்கிழமை காலையில் ராமேசுவரத்துக்கு வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். இதன் பிறகு, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடியதும் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் 500- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சி நிா்வாகம் சாா்பில் 200- க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.
ராமேசுவரம் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தனுஷ்கோடி, கோதண்டராமா்கோயில், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து பாலம் உள்ளிட்டவற்றை அவா்கள் பாா்த்து ரசித்தனா். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.