keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
ராயபுரம், தேனாம்பேட்டையில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது
கழிவுநீா் உந்து குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை செயல்படாது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா், வேனல்ஸ் சாலையில் கழிவுநீா் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவைச் சீரமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) இரவு 10 முதல் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 10 மணி வரை நடைபெற உள்ளன.
இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது.
எனவே, இந்த இடங்களில் கழிவுநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்க பொதுமக்கள் 81449- 30905 (ராயபுரம்), 81449 - 30909 (தேனாம்பேட்டை) ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.