செய்திகள் :

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

post image

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கோரிக்கையின்படியே எக்ஸ் நிறுவனம் இதனைச் செய்துள்ளதாக தகவல்கள் பரவியதால், மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

''ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் அரசு எதையும் கேட்கவில்லை. மாறாக, ராய்ட்டர்ஸ் இந்தியாவில் முடக்கப்பட்டது ஏன் என்றே கேட்டுள்ளது. மற்ற நாடுகள் கையாளும் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ராய்ட்டர்ஸ் வேண்டும் என்பதை அரசு விரும்புகிறது என்பதையே இவை காட்டுகின்றன. எக்ஸ் தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் குழப்பமாக இது இருக்கலாம்.

ராய்ட்டர்ஸை நிறுத்திவைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் அரசுக்கு இல்லை. இந்தப் பிரச்னையை சரிசெய்ய எக்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |

Government of India did not ask the social media giant to block ruters handle and wants it to operate in the country.

குஜராத்: கொலை முயற்சி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

குஜராத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா வசாவா (37) கைது செய்யப்பட்டாா். வசாவாவின் தொகுதியான திதியாபாடாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் ... மேலும் பார்க்க

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மனு

பிகாா் உள்பட நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மனு தாக்கல் செய்துள்ளாா். வாக்காளா் பட்ட... மேலும் பார்க்க

தரமற்ற தலைக்கவசம் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ள... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் கைது: நொய்டாவில் சம்பவம்

நொய்டாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்ப... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: பிரதமரை வரவேற்ற குட்டி இதயங்கள்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பிரேசில் சென்றுள்ளார்ரியோ டி ஜெனீரோ நகரில் பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரேசிலுக்குச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு...... மேலும் பார்க்க

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார். அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க