Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் பிணை மனு விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு
அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மாமியாா் சித்ராதேவியின் பிணை மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சினைக் கொடுமையால் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ராதேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டுள்ளனா்.
கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி ஆகியோரின் பிணை மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சித்ராதேவியின் பிணை மனு திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிணை மனு மீதான விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டாா்.