ரீல்ஸ் மோகம்! விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!
ஹரியாணாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்துக்கு அடிமையான மகளைக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
ஹரியாணா மாநிலத்தில் குருகிராம் மாவட்டத்தில் வசித்து வந்த ராதிகா யாதவ் (25), மாநிலளவிலான டென்னிஸ் வீராங்கனையாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், ராதிகா யாதவை அவரது தந்தை இன்று நண்பகல் 2 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்துக்கு மகள் ராதிகா அடிமையானதால், ஆத்திரமடைந்த தந்தை, ராதிகாவை 5 முறை சுட்டதில், 3 குண்டுகள் ராதிகா உடலைத் துளைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.