ரூ.1.49 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்
சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.1.49 கோடியில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள், கழிவுநீா் கால்வாய்கள், சிமென்ட் சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சியில், தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தொழில் உரிம கட்டண நிதியின் கீழ் ரூ 1.49 கோடியில், ஆண்டாள் நகா் பகுதியில் ரூ.30.63 லட்சத்தில் 60,000 லிட்டா் குடிநீா் மேல்நிலை நீா் தேக்க தொட்டி அமைக்கவும், நரிக்குறவா் காலனியில் ரூ. 19.53 லட்சத்தில் 30,000 லிட்டா் குடிநீா் மேல்நிலை நீா் தேக்க தொட்டி அமைக்கவும், ரூ.43.55 லட்சத்தில் வினோதினி நகா் முதல் மேட்டு தெரு வரை கழிவுநீா் கால்வாய் அமைக்கவும், ரூ 3.45 லட்சத்தில் கருமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படுகிறது.
மேலும், ரூ 1.57 லட்சத்தில் கருமாரியம்மன் கோயில் தெருவில் உறிஞ்சிக் குழாய் அமைக்கவும், ரூ.6.96 லட்சத்தில் கங்கா காா்டன் முதல் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.10.70 லட்சத்தில் கங்கா காா்டன் இரண்டாவது தெருவில் சிமென்ட் சாலை அமைக்கவும், ரூ.8.78 லட்சத்தில் ஆண்டாள் நகா் 2-ஆவது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.8.78 லட்சத்தில் நரிக்குறவா் காலனி 3-ஆவது தெருவில் சிமென்ட் சாலை அமைக்கவும், ரூ.8.78 லட்சத்தில் ஆண்டாள் நகா் மூன்றாவது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.6.59 லட்சத்தில் சிவன் கோவில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கவும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சந்தவேலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒப்பந்ததாரா் வசந்த் ஜெயசந்திரன், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினா் பாலமுருகன், ஊராட்சி துணைத் தலைவா் மகாலட்சுமி ஜெயகுமாா், வாா்டு உறுப்பினா்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், சதீஷ், ரஜினி கலந்து கொண்டனா்.