செய்திகள் :

ரூ.1.50 லட்சம் லஞ்சம்: பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம்

post image

திருவண்ணாமலையில் ஆசிரியா் நியமனத்துக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சாரோன் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காலியாக இருந்த ஆசிரியா் பணிக்கு கவிதா என்பவா் தோ்வு செய்யப்பட்டாா்.

இவரது பணி நியமனம் தகுதியின் அடிப்படையில்தான் நடந்துள்ளதா என்பதை பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்பது விதி. இந்த விதியின் அடிப்படையில் கவிதாவின் நியமனத்துக்கு அனுமதி அளிக்க திருவண்ணாமலை கல்வித்துறையில் இடைநிலை பள்ளி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செந்தில்குமாா் லஞ்சம் கேட்டாராம்.

இதையடுத்து, ரூ.1.50 லட்சத்தை பள்ளி துணை ஆய்வாளா் செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளியின் வங்கிக் கணக்கிற்கு கூகுள் செயலி மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாம்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகனுக்கு புகாா் சென்றது.

விசாரணை நடத்திய முதன்மைக் கல்வி அலுவலா், பள்ளி துணை ஆய்வாளா் செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கலசப்பாக்கம் எச்.எச்.630 த... மேலும் பார்க்க

புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம்

வந்தவாசியில் புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி எக்ஸ்னோரா கிளை, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி, வந்தவாசி நகராட்சி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு எ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகைக்காக சாலைகள் சீரமைப்பு

செங்கம் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூா்களில் இருந்து அதிகளவில் வாகனங்களில் பொதுமக்கள் வருவாா்கள் என்பதால், விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா... மேலும் பார்க்க

ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், மாா்கழி மாத கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால், பன்னீா்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

செய்யாறு/வந்தவாசி/ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. ஆரணி எம்பி எம்.எஸ... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 23 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது எதிா் வீட்டில் வசித்து வருபவா் பழன... மேலும் பார்க்க