ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்டின் லதேஹார் மாவட்டத்தில், மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியோர் இணைந்து இன்று (மே 24) அதிகாலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, லதேஹார் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில், மாவோயிஸ்டுகளின் கிளை அமைப்பான ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷான் எனும் அமைப்பின் தலைவரான பப்பு லோஹரா மற்றும் அவருடன் செயல்பட்டு வந்த பிரபாத் கஞ்சு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதில், பப்பு என்பவரைப் பிடிக்க காவல் துறையினர் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடிவந்த நிலையில் இன்று அவர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் மூலம் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்று முற்பகலில் கரையைக் கடக்கிறது தாழ்வு மண்டலம்! என்ன நடக்கும்?