செய்திகள் :

ரூ.2,796 கோடி மோசடி வழக்கு! அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

post image

தொழிலதிபர் அனில் அம்பானியின் மீதான வழக்கில் ரூ.2,796 கோடி கையாடல் செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான அனில் அம்பானியின் நிறுவனங்களில், யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூர் விதிகளை மீறி முதலீடு செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. முதலீடு செய்யப்பட்ட பணத்தை கொஞ்சம்கொஞ்சமாக கையாடல் செய்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும், ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களுக்கும் இடையிலான மோசடி பரிவர்த்தனைகளால் யெஸ் வங்கிக்கு ரூ.2,796 கோடி இழப்பு ஏற்பட்டதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அனில் அம்பானி, ராணா கபூர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உள்பட மோசடியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

CBI chargesheets Anil Ambani, Rana Kapoor in Rs 2.8k crore corruption case

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்... மேலும் பார்க்க

செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?

செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ... மேலும் பார்க்க

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.வந்தே பாரத் ... மேலும் பார்க்க

லலித் மோடியின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது!

நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்த... மேலும் பார்க்க

செப். 22 முதல் ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: வேளாண் அமைச்சர்!

மத்திய ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை டிராக்டர் தயாரிப்பாளர்களை சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்துகிறார்.விவசாய உபகரண உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான ச... மேலும் பார்க்க