செய்திகள் :

ரூ.200-க்கு வீடுகளுக்கு நேரடி டேட்டா சேவை?

post image

தமிழக மக்களின் வீடுகளுக்கு குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சட்டப்பேரவையில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்ததாவது, சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். மேலும், மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். நாகப்பட்டினத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், தகவல் தொழில்நுட்ப துறையில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை முதல்வர் திறம்படக் கையாண்டார். தற்போது, சாம்சங் தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையின் அடுத்தக்கட்டமாக, மேலும் ரூ.1000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி சேவையைப்போல, இணைய சேவையும் வழங்கப்பட இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.

100 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்துடன் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவையை வழங்கிட திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா். தமிழ்நாடு சுற்றுலா... மேலும் பார்க்க

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களு... மேலும் பார்க்க