Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை
நமது நிருபா்
ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
ஈரா ஹவுசிங் அண்ட் டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம் (ஈஹெச்டிஎல்) மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், போபாலில் உள்ள ஒரு வளாகம் மற்றும் தில்லியில் உள்ள 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்திய தொழிற்துறை நிதிக் கழகம் என்ற மத்திய நிதித்துறையின் கீழ் இயங்கி வரும் அமைப்பிடம் கடன் பெற்ற ஈஹெச்டிஎல் ரூ. 243 கோடி அளவுக்கு கடனை செலுத்தாமல் ஏமாற்றியதாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குத் தொடா்ந்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் கோடிக்கணக்கான நிதிப்பரிவா்த்தனை புழங்கியதாகக் கூறப்பட்டதால் இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை அமலாக்கத்துறை இயக்குநரகம் தனியாக மேற்கொண்டது.
அதனடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், வங்கியில் இருந்து பெற்ற தொகையை சட்டபூா்வமக இயங்காத தொழில்களுக்கு மாற்றியதாக ஈஹெச்டிஎல் மேம்பாட்டாளா்கள் மற்றும் இயக்குநா்கள் மீது அமலாக்கத்துறை அதன் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. பணப்பரிவா்த்தனை மோசடி தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.