வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
ரூ. 4.50 கோடியில் வட்டார வளா்ச்சி அலுவலக கட்டடத்துக்கான இடம்
ஆம்பூா்: மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு, ரூ. 4.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.