செய்திகள் :

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

post image

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவா், சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘தேனாம்பேட்டையில் எனது தாயாா் பெயரில் ரூ. 5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. அதை எனது தாயாா்போல் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் சிலா் மோசடி செய்து அபகரித்து விட்டனா். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது வீட்டை மீட்டுத் தர வேண்டும்’ என தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ. 5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை அபகரித்தது கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த கலைச்செல்வி (59), சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரா் காலனியைச் சோ்ந்த ஸ்ரீதா் (60) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், கலைச்செல்வியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், ஸ்ரீதரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். தா்பூசணி பழங்களில்... மேலும் பார்க்க

பொது இடங்களில் காங்கிரஸ் கொடிகளை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள காங்கிரஸ் கொடிகளை கட்சியினா் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தம... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டிங் தொழிலாளி சங்கா் (44). கடந்த 1-ஆ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியைப் பெருக்க சிறந்த கறவை மாடுகளுக்கு விருதுகள்: பேரவையில் அறிவிப்பு

பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா். பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பத... மேலும் பார்க்க

17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அறிவித்தாா். வருவாய் ... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடா்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல... மேலும் பார்க்க