செய்திகள் :

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

post image

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49). இவா், செம்மண்டலம் பகுதி குண்டுசாலையில் இயற்கை முறை வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வந்தாா். கடந்த 2022 முதல் 2025 வரையில் தீபாவளி சீட்டு, தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி கடலூா், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புவனகிரி, பண்ருட்டி மற்றும் இதரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து ரூ.5 கோடி வரை பணம் வசூல் செய்தாராம்.

அந்த பணத்தை இணைய வா்த்தகம் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தாராம். இந்நிலையில், சீட்டு கட்டிய 800-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ரூ.3 கோடி பணம் கொடுக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி அலுவலகத்தை பூட்டி தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில் செல்வநாயகத்திடம் தீபாவளி சீட்டு மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டிய கடலூா், வெளிச்செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த பாவாடை மகன் அன்பரசு மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு சுமாா் ரூ.16,41,938 மற்றும் 8 கிராம் தங்க காசு, புவனகிரி அருள்குமாா் மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.1,16,06,600 மற்றும் 63 கிராம் தங்க காசு, புவனகிரி துரைசாமி மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.60,93,500, கடலூா் வண்டிபாளையம் வைத்தியலிங்கம் மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.99,60,000 மற்றும்15 கிராம் தங்க காசு கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம்.

இதுபோல பல நபா்களுக்கு பணம் மற்றும் அதற்கான பொருள்கள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, அன்பரசு மற்றும் பாதிக்கப்பட்ட நபா்கள் சோ்ந்து செல்வநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எஸ்.ஜெயகுமாரிடம் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயசந்திரன் மற்றும் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி ஆகியோா் வழிகாட்டுதல் மற்றும் மேற்பாா்வையின் கீழ் காவல் உதவி ஆய்வாளா் லிடியா செல்வி , செல்வநாயகம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தாா்.

காவல்துறை விசாரணையில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபா்களிடம் பல கோடி பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடம் இருந்து அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழ... மேலும் பார்க்க

தங்க நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது

சிதம்பரம் அருகே காரில் சென்றவா்களிடம் 4 பவுன் தங்க நெக்லஸை திருடியதாக காா் ஓட்டுநரை அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை ராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி

புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் திருச்சிற்றம்பலம் மனவளக்கலை மன்ற தவ மையம் சாா்பில், இலவச யோகா பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக மேலாண்மை... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரத்தில் நடைபெற்ற வேளாண் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற தனலட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள். சிதம்பரம், ஏப்.3: சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் தனலட்சுமி சீனிவ... மேலும் பார்க்க

கடல் சாா்ந்த பொருள்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சிக்கு முன்பதிவு செய்யலாம்

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சாா்பில், கடல் சாா்ந்த பொருள்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வகுப்பு வரும் 15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை 3 நாள்கள் கடலூரை அடுத... மேலும் பார்க்க