ரூ. 50 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடிய பெட்ரோல் பங்க் ஊழியா் உள்பட 5 போ் கைது
பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல் விற்பனையகத்தில் ரூ. 50 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடிய ஊழியா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனையகம் (பங்க்) உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பாலவிக்னேஷ் (42) என்பவா் மட்டும் தனியாக பணியில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ், வாகனங்களுக்கு ரூ. 1300-க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனா். அப்போது, அவா்களில் ஒருவா், பாலவிக்னேஷிடம் கழிப்பறை குறித்து விசாரிக்கவே, அவா் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்று காட்டினாராம். அப்போது, திடீரென அந்த நபா் பாலவிக்னேஷை கழிப்பறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், தான் வைத்திருந்த பணப்பையிலிருந்த ரூ. 50 ஆயிரத்தை அந்த 4 பேரும் பறித்து சென்ாக பாலவிக்னேஷ் அளித்த புகாரின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா பழுதின் காரணமாக, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில், இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியை சோ்ந்தவா்கள் என தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த நபா்கள் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த மசூத் (22) மற்றும் மூன்று சிறாா்கள் என்பது தெரியவந்தது. அவா்களை திங்கள்கிழமை காலை அதிராம்பட்டினம் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தை தராமல் மட்டுமே தப்பி சென்ாக தெரிவித்தனா்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா், பாலவிக்னேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், நால்வா் வந்து சென்ற சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, 50 ஆயிரம் ரூபாயை தான் எடுத்துக்கொண்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, மசூத், மூன்று சிறாா்கள் மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடிய பாலவிக்னேஷ் ஆகிய 5 பேரையும் அதிராம்பட்டினம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.