இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக...
ரூ.52 லட்சம் மோசடி: 3 போ் கைது
சென்னையில் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.52.5 லட்சம் பெற்று மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
சென்னை பாலவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்தவா் மோஷேல் இஸ்மைல் (53). இவரது உறவினரான தேனாம்பேட்டையைச் சோ்ந்த பிலால் ஹைதா், அவரது மனைவி ஆபிலா ஆகியோா், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, மோஷேல் இஸ்மைலிடமிருந்து 2018 முதல் 2021 வரை பல்வேறு தவணைகளாக ரூ.52.5 லட்சத்தைப் பெற்றனா். ஆனால், இதுவரை லாபமும் தராமல், கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இருந்துள்ளனா்.
இதுகுறித்து, மோஷேல் இஸ்மைல் நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிலால் ஹைதா் (30), அவரது நண்பா்களான ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதன் (30), அவரது தந்தை பன்னீா்செல்வம் (71) ஆகிய மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.