உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
சென்னையில் 7 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!
குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக, சென்னையில் அம்பத்தூா், அண்ணா நகா் உள்பட 7 மண்டலங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 30, ஆக.1) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை 2-ஆவது வரிசை பிரதான குடிநீா் குழாய் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த புதிய குழாயை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பிரதான குடிநீா் குழாயுடன் இணைக்கும் பணிகள் புதன்கிழமை (ஜூலை 30) காலை 8 முதல் ஆக. 1-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளன.
இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.