செய்திகள் :

ரூ. 6,266 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள்: ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

post image

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து சுமாா் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2025 ஏப். 30-ஆம் தேதி வரை 98.24 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. எனினும், ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இப்போது வரை திரும்பிவராமல் மக்களிடமே உள்ளது.

2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன. இப்போது ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளைச் செலுத்தி வேறு நோட்டுகள் பெறுவது அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையம் மூலமாகவும் ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பலாம். அந்த நோட்டுகளுக்கு இணையான பணம் அனுப்பியவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத... மேலும் பார்க்க

தகராறுகளுக்கு தீா்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெ... மேலும் பார்க்க

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க