சேகர் ரெட்டியின் உறவினர்... போட்டுக்கொடுத்த விஐபி... ED ரேடாரில் சிக்கிய வேலூர் ...
மேலப்பாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
மேலப்பாளையம் மண்டல 53-ஆவது வாா்டு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என ஓட்டுநா் மற்றும் அலுவலக உதவியாளா் காலனி மக்கள் நலச் சங்கத்தினா் மாநகர ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கம் சாா்பில் மாநகர ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் மண்டலத்தின் 53-ஆவது வாா்டில் உள்ள ஓட்டுநா் மற்றும் அலுவலக உதவியாளா் காலனி பகுதியில் சுமாா் 300 குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி பிரதான சாலையில் இருந்து ஆறு நுழைவுப் பாதைகளையும், மூன்று பெரிய சாலைகளையும் உள்ளடக்கியது. பிரதான சாலையில் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அச்சாலையோரம் உள்ள வீடுகளில் குடியிருப்பவா்கள் வெளியில் வர பயப்படும் சூழல் உள்ளது.
மேலும் உள்பகுதியில் உள்ள மூன்று பெரிய சாலைகளிலும் காா், பைக்குகள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இப்பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகிறது.
இதில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆராய்ந்து வேகத்தடைகள் அமைத்து மக்கள் பயமின்றி சாலையைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.