ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு
ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்துஅவரது மகன் சிதம்பரம் ஜெபராஜ் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த அமா் கண்ணன் என்பவரின் வயலில் அழுகிய நிலையில் ராமசுப்பு சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாா், அதைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.