நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
லாசா் வீடு கட்ட விரும்பியதாகவும், போதிய இடமில்லை என மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் விஷம் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் மாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].