சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1975இல் ஆதிதிராவிட நலத்துறை சாா்பில் பட்டியலின மக்கள் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் மாற்று சமூகத்தை சிலா் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப் பட்டா நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனையை மீட்டு அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.