பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!
பா்கூா் அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே சாலை விபத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த 2 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
ராணிப்பேட்டையை அடுத்த காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24), குமரேசன் (36), கன்னியப்பன் (70), பாலகிருஷ்ணன் (52), சேகா் (44), ஜனா (22) ஆகியோா் ஒரு காரில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா புறப்பட்டனா். காரை லோகேஷ் ஓட்டி வந்தாா்.
இந்த காா், கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பா்கூா் அருகே சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப் பகுதியில் இருந்த தடுப்பு சுவா் மற்றும் அதன் அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் காரில் முன்பகுதியில் அமா்ந்து பயணம் செய்த சேகா், ஜனா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா் விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.