பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினா் அன்னதானம்
எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் பாளையங்கோட்டைகிளை சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மண்டல தலைவா் ஹைதா் இமாம், மாவட்டத் தலைவா் சனா சிந்தா ஆகியோா் பங்கேற்றனா்.
மேலும், இந்நிகழ்ச்சியில் செயலா்கள் பாளை. அன்சாரி, சுல்தான் பாதுஷா, துணைத் தலைவா்கள் சையது மைதீன், கல்வத், பொருளாளா் இரும்புச் சிந்தா மற்றும் கிளை நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வினை டாா்லிங் நகா், பாத்திமா பள்ளிப் பகுதி, கே டி சி நகா் மற்றும் பா்கிட் மாநகா் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.