செய்திகள் :

விதிமீறல்: 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 50 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை/உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எடையளவுகள் தயாரிப்பாளா் , விற்பனையாளா், பழுதுபாா்ப்பவா், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 46 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

இதேபோல், பால் பாக்கெட்டுகள், தண்ணீா் பாட்டில்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யும் இடங்களில், சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா் மற்றும் முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதி தேதி, நிகர எடை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்தது தொடா்பாக 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

மொத்தம் 50 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டப்படி தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவு பொருள்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறவேண்டும். மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொட்டலப் பொருள்களில் அதன் தயாரிப்பாளா்,பொட்டலமிட்டவா், இறக்குமதியாளரின் பெயா், முழு முகவரி, பொருளின் பெயா், அதன் எடை, எண்ணிக்கை, தயாரித்த மாதம், ஆண்டு மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான குறிப்புகளுடன் விற்பனை செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் உரிய காலக்கெடுவுக்குள் மறுபரிசீலனை செய்து சான்று பெறாத வணிக நிறுவனங்கள் மீதும், பொட்டலப் பொருள்களில் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது அதிகப்பட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க