பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்
மருத்துவக் கழிவுகளை எவ்வாறு கையாளுவது?: காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு!
மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் அவசியம் குறித்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி மானூா் ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தாழையூத்து உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மானூா் வட்ட காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் கலந்து கொண்டு மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பிற சுகாதார அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது மற்றும் அகற்றுவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மருந்துக் கடை உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.