மதராஸி: "விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; அஜி...
ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னையிலுள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள இளநிலை புத்தகம் கட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: இளநிலை புத்தகம் கட்டுநர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பைண்டிங்(Binder)பிரிவில் டிரேடு சான்றிதழ் அல்லது பிரிண்டிங் தொழிற்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியைவிட உயர்கல்வித்தகுதி பெற்றிருப்பவர்களுக்கு உச்ச வயதுவரம்பு நிர்ணயம் கிடையாது.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்பும் உறையின் மேல் "வேலைவாய்ப்பு விண்ணப்பம் இளநிலை புத்தகம் கட்டுநர்" என்று குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணை யரகம், 110, அண்ணா சாலை, சென்னை -02.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.8.2025
மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.