தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை
வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.