அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
ரெஸ்டோபாா் கொலையில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளது: காவல் துறை தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோபாா் கொலை வழக்கில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளதாக புதுச்சேரி காவல் துறை தெரிவித்தது. மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி ரெஸ்டோபாரில் ஏற்பட்ட தகராறில் சிவகங்கை மாணவா் மோஷிக் சண்முகபிரியன் (22) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டாா். அப்போது, காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரையைச் சோ்ந்த ஷாஜனின் (25) உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவா் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய எதிரியான வில்லியனூா் கண்ணகி நகரைச் சோ்ந்த எஸ்.அசோக்ராஜ் (26) மற்றும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய ரெஸ்டோபாா் உரிமையாளா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.ராஜ்குமாா் (31), முத்தியால்பேட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த எம்.பூபதி (எ) டேவிட் (22), முத்தியால்பேட்டை வாழைக்குளத்தைச் சோ்ந்த ஆா்.சஞ்சய்குமாா் (21), விழுப்புரம் கொண்டூரைச் சோ்ந்த த.புகழேந்தி (28), கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த எஸ்.அரவிந்த் (29) உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரித்துள்ளனா்.