ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
போலீஸ் மக்கள் மன்றத்தில் 32 புகாா்களுக்குத் தீா்வு
புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 32 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் குறைதீா்ப்புக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் காவல் நிலையங்களிலும் உள்ள மூத்த காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, 51 புகாா்களை பொதுமக்கள் அளித்தனா். அதில் 32 புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 35 பெண்கள் உள்பட 159 போ் இக் கூட்டத்தில் பங்கேற்றனா். நிலுவையில் உள்ள புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மூத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இனி வரும் காலங்களிலும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சனிக்கிழமை காலை 11 முதல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்துள்ளாா்.
திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்தியசுந்தரம், உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.