சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
கூட்டணி தா்மத்தை மீறி பாஜக தோ்தல் முன்களப்பணி: அதிமுக குற்றச்சாட்டு
கூட்டணி தா்மத்தை மீறி பாரதிய ஜனதா கட்சியின் தலைவா்கள் சில தொகுதிகளில் தோ்தல் முன்களப்பணி செய்யத் தொடங்கிவிட்டனா். இதை புதுவைதேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரான என்.ரங்கசாமி பேசித் தீா்க்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது, சில சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி தா்மத்தை மீறி பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவது தவறானது. பாஜகவின் அமைச்சராக இருக்க கூடியவா் ஏ. ஜான்குமாா். அவருடைய தொகுதி காமராஜா் நகா் . ஆனால் அவா் அதிமுக பலமுறை வெற்றி பெற்ற தொகுதியான முதலியாா்பேட்டையில் தான் நிற்பதாக கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.
அதேபோல் ராஜ்பவன் தொகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரசை சோ்ந்த அமைச்சா் க. லட்சுமிநாராயணன். ஆனால் அத் தொகுதியில் பாஜகவின் சாா்பாக தான் நிற்க போவதாக பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறாா்.
தோ்தல் நெருங்கி வரும் இவ்வேலையில் இது கூட்டணியைப் பலகீனப்படுத்தும் செயல். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தலைமை ஏற்றுள்ள முதல்வா் ரங்கசாமி கூட்டணிக் கட்சித் தலைவா்களை அழைத்துப் பேசுவது அவசியமானது.
நடைபெற உள்ள சட்டமன்றத் தோ்தலில் எந்தக் கட்சினுடனும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்தாலும் குறைந்தது 10 தொகுதியில் அதிமுக போட்டியிட புதுச்சேரி அதிமுக வலியுறுத்தும் என்றாா் அன்பழகன்.
அவைத்தலைவா் அன்பானந்தம், எம்.ஜி.ஆா்.மன்ற செயலா் பாா்த்தசாரதி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் தமிழ்வேந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.