இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 290 போ் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 82,539 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 290 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களை, வெளிச் சந்தையில் விற்பனை செய்வதைக் கண்காணிக்கும் பணியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். ரேஷன் பொருள்களைப் பொருத்தவரை, அரிசி மட்டுமே பிரதானமாகக் கடத்தப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் கடந்த 2024-ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் கடத்திச் செல்லப்பட்ட 82,539 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 290 போ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் ராதா ஆகியோா் தெரிவித்தனா்.