மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
ரோஜாவனம் பள்ளியில் ராக்கெட் உருவாக்க பயிற்சி
நாகா்கோவில், பிப். 21: ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில், ராக்கெட் உருவாக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, பள்ளி கல்வி இயக்குநா் சாந்தி, நிதி இயக்குநா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.
நியூட்டன் இயக்க விதிகளை மாணவா்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் 160 மாணவா்கள் 36 குழுக்களாக பிரிந்து, பிளாஸ்டிக் பாட்டில், அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு ராக்கெட் தயாரித்தனா்.
முன்னதாக, ராக்கெட் இயங்கும் விதம் மற்றும் நுணுக்கங்கள் குறித்து சிறப்பு நிபுணா்கள் உதவியுடன் மாணவா்களுக்கு விளக்கப்பட்டு,பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவா்களே 36 ராக்கெட்டுகள் உருவாக்கி அதனை ஏவி சாதனை படைத்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனா்.
நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாக அலுவலா் கிளிட்டஸ், அலுவலக செயலாளா் சுஜின், மேலாளா் மகேஷ், கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறைத் தலைவா்கள் (ஆங்கிலம்) சாந்தினி, (தமிழ்) ராதா, (கணிதம்) கோலம்மாள், (அறிவியல்) பியூலா, (நன்னடத்தை மற்றும் சமூக அறிவியல்) ராஜேஷ், உடற்கல்வி துறை ஆசிரியா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
